அவளிடம் என்ன இருகிறது

திடீரென எனக்குள்ளே ஒரு கேள்வி ...
அதுவும் அவளை பற்றியதுதான் ..
உன் மேல் அவளுக்கு
துளி அளவுக்கும் கூட
விருப்பம் இல்லை என்பது
உனக்கு தெரிந்தும் கூட
நீ ஏன் அவளையே நினைத்து
அவள் தான் வேண்டும் என்று ஏங்குகிறாய் ??
அப்படி என்ன தான் இருகிறது
அவளிடம் மற்ற பெண்களிடம் இல்லாதது ...
ஆம் .. அப்படி என்ன தான் இருகிறது
அவளிடம் .....???? ....... ??????

கேள்வியை உணர்ந்து கொண்ட
என் இதயம் அமைதியாக சொன்னது
" அவள் எந்த நிலையிலும்
தன்னிலை மாறாதவள் "

அதனால் தான் அவளை நான் விரும்புகிறேன் .....

எழுதியவர் : செபஸ்டியன் லீலாஆனந்தம் (24-Apr-16, 3:32 pm)
பார்வை : 111

மேலே