உழவு - உழவனதிகாரம்

உழவு - உழவனதிகாரம்

குறள் வெண்பாக்கள்

நாறுது காற்றதென் றெண்ணி தொலைபோவோர்
மண்வா சமறியா தார் ........................................... .....1

சேற்று யிராயெனைக் கண்பார்த்த காலன்
அவன்கயிறை கைமறந்தான் காண் .................. .....2

வானக் கதிரளக்கு மெங்கள் பொழுது
புலரும் மழைவரும் நாள் .................................... .....3

தரிசென சோம்பி நிலம்பாரார் வாழ்வென்றும்
ஆகிடும் பாலையே தான் ..................................... .....4

வேண்டும் இனியோர் பிறவி அதிலும்
உயர்த்திட வேண்டும் வரப்பு. .............................. .....5

மா,தென்னை காத்திடுவோம் வண்டு வருமுன்
மறப்பின் தொடரும் துயர். ................................... .....6

உழவுக் கணிகலன் ஊடுபயிர் கொல்தல்
அதின்றேல் அனைத்துமே வீண் ......................... .....7

இயற்கை உரமிலாது ஒன்றிலை பூமகள்
இன்மனம் காணும் வழி. ...................................... .....8

வற்றிடும் கேணிநீர் காண அழும்நெஞ்சம்
வற்றியபின் வாழுமோ வாழ்வு .......................... .....9

மண்வெட்டி பார்த்து மடையை திறப்பின்
பயிர்க்கும் உயிருக்கும் நன்று. ........................... ....10









(படிப்பறிவு குறைவே என்றாலும் தள தமிழ் அறிஞர்கள், தளத்தோழர்களின் ஆசிகளில் என்னாலும் இலக்கணப் பாக்கள் எழுதமுடியும் என்ற முயற்சி இந்த குறள் வெண்பாக்கள் வடிவில் உருமாறி இருக்கிறது. என் உழவுத்தொழிலுக்கும். திருவள்ளுவருக்கும் இது சமர்ப்பணம்.

நான் என்ன நினைத்து குறட்பா எழுதினேனோ, அது குறித்த இதன் உரை விளக்கங்களை ”உழைப்பே உயர்வு” என்ற எனது கட்டுரை பகுதியில் பதிவிட்டிருக்கிறேன்.)

எழுதியவர் : க.அர.இராசேந்திரன். (25-Apr-16, 6:53 am)
பார்வை : 1136

மேலே