பச்சை

கிளிப் பச்சை
பேருவகை
பசேலேன்ற வயல்
பெரு மகிழ்வு
பசுமை எங்கும்
பேரின்பம்.

இருப்பினும்

பச்சை வேறுவிதமாக
பச்சைப் பொய்.

பச்சைத் துரோகம்
கொடுரம் என்பினும்

பச்சையாகப் பேசுவது
கொச்சை என்றினும்

காணலாம் வெவ்வேறு
வழி மொழிதல்களிலே

அழகிய ஒப்பனையாகவும்
அநீதியான ஒப்புதல்களாகவும்


பச்சை கூறும் கூற்று
பசுமையாக மனதிலே.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (26-Apr-16, 11:26 am)
Tanglish : pachchai
பார்வை : 1505

மேலே