தமிழ் தொண்டன்

உண்டற் கமுதான செந்தமிழ்ச் சொற்கள்
மொண்டாற் குறையாதடா முழுதும் தேயாதடா
கண்பட்டு போனதாலோ தமிழின் சுவை
தொண்டாற்ற தற்குநாணு கின்றான் தமிழன்.

தமிழா...!!!
பண்பட்ட நாகரிகம் படுத் துறங்குதேடா...
பண்பட்ட நாகரிகம் படுத் துறங்குதேடா...
தம்பட்டம் வேணுமாட தமிழை தாயென் றுரைக்க..

தாய்மொழி பேசுதற்கு தலைகுனியும்
ஈனர்களே
பெற்ற தாயை, தாயென் றழைக்க
நாணுவீரோ??

நறுந்தேன் சுவையடா கன்னித்தமிழ்
நாவால் நக்கித்தான் ருசித்தேனன அறிவீரோ??

தமிழை வளர்ப்பதற்கு..

தமிழ் நேசியாய்
பிறப்பெடுப்போம்
காற்றில் வீசியே
உலகிலதை வளர்ப்போம்....

எழுதியவர் : இலக்கியன் அகல்யன் (26-Apr-16, 1:45 pm)
பார்வை : 159

மேலே