உயிரிலே உறைந்தவன் உணர்விலே கலந்தவன் உள்ளத்திலே சுமப்பவன் உடலிலே உதிரமானவன்

என்னில் பரகாயபிரவேசம் ஆனவனே

காதல்
இலக்கணப்பிழை
கண்டேன்
ஒரு உயிருக்குள்
இரு உடல் காண்கையிலே

தானாக வந்த
பென்சிலினே
பெண்ணை
என்ன செய்ய
போகிறாயோ

என் மைட்டோகாண்ட்ரியா
உன்னால்
உயிரே
நம் உயிரில்
காணுவேன்


நான்கு கண்ணிலும்
ஒன்றே ஒன்று தான் பார்வை
அதை உன் கண்ணில்
காண்கிறேனடா

இரு உடல் இல்லை(ஏது)
இரு மனம் இல்லை
இனி மொழி கூட தேவை இல்லை
உயிரும்
மெய்யும்
உயிர்மெய்யும் காதல்


~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (25-Apr-16, 1:24 pm)
பார்வை : 128

மேலே