10 செகண்ட் கதைகள் - பிரதிபலிப்பு

மெய்க்காப்பாளர் முன்னே செல்ல மன்னரும் மாறுவேடத்தில் நகர்வலம் சென்றார்.

எதிரே வந்த மக்கள் யாரும் மன்னரைக் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், மெய்க்காப்பாளரைப் பார்த்து எல்லோரும் புன்னகைத்தனர். மன்னருக்கு ஆச்சரியமும் கோபமும் தாங்க முடியவில்லை.

"என்னை இங்கு யாருக்குமே தெரியவில்லை. ஆனால் உன்னை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது" என்று கோபமாக, சற்று பொறாமையாக சொன்னார்.

மெய்க்காப்பாளர், "என்னையும் யாருக்கும் தெரியாது" என்றார்.

"அப்புறம் ஏன் உன்னைப் பார்த்துமட்டும் புன்னகைக்கிறார்கள்?".

"ஏனென்றால், நான் அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன்".

இந்த உலகம் அப்படியே நம்மை பிரதிபலிக்கிறது.

எழுதியவர் : செல்வமணி (25-Apr-16, 11:55 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 215

மேலே