10 செகண்ட் கதைகள் - நம்பிக்கை

படித்து முடித்து நாலைந்து வருடம் வேலையே கிடைக்காமல் இருந்து
திடீரென்று வந்த இண்டர்வியூவுக்கு வந்த அவனிடம் கேட்கப்பட்ட கேள்வி:

"உங்களுக்கு எது முக்கியம், ஏதோவொரு வேலையா? படிப்புக்கேத்த வேலையா?"
"ரெண்டும் தான்."
"இந்த வேலை உங்களுக்கு கிடைக்காமல் போனால் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்?"
"இதை விட நல்ல வேலை காத்திருக்கும் போல என்று தான் தோணும்"
"உங்கள் தகுதி, திறமை, படிப்பு - இவற்றில் குறை ஏதும் இருந்தால் தெரிவிக்கலாம்"
"அது பார்ப்பவர் கண்ணுக்கு தான் தெரியும், அப்படி இருந்தாலும் சரி செய்து கொள்வது எளிது தான், எனக்கு என் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு, அந்த விஷயத்தில்"
"ஒரு மாதம் அப்ரெண்டிஸ்-ஷிப், சம்பளமில்லாமல் வேலை செய்யச்சொன்னால்."
"வேண்டாம், நம்பிக்கை இல்லாமலோ வெயிட்டிங் லிஸ்டிலோ என்னை வைப்பது என் நம்பிக்கையை லேசாக அசைக்க பார்க்கும். மனதளவில் நான் சமாதானமாக மாட்டேன்."
"................."
"........................"
"என்ன செய்யலாம்?"
"உங்கள் கேள்விகள் எனக்கு நம்பிக்கையை தந்தாலும் நான் அசர மாட்டேன். உங்கள் முடிவு எதுவாக இருந்தாலும் எனக்கு சந்தோசமே. நேரம் வரும் வரை காத்திருப்பேன்."
"உங்களுக்கு நேரம் வந்து விட்டது என்று சொன்னால்"
"தேங்க்ஸ் சார்.!"

எழுதியவர் : செல்வமணி (25-Apr-16, 11:33 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 137

மேலே