இயற்கை
உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு.
உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு.
வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு.
தோல்வியடைந்தால் கறிவேப்பிலை மரம் நடு.
சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு.
கையில் பணம் இருந்தால் பூச்செடிகள் நடு.
உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் மாடித்தோட்டம் நடு.
எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு.
பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு.
சந்தோஷமாக இருக்கும்போது வேப்ப மரம் நடு.
கவலையுடன் இருக்கும்போது செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சு.
வீட்டில் இடம் இருந்தால் முடிந்தவரை மரம் நடு.
இடமில்லையென்றால் முடிந்தவரை இதனைப் பகிரு.
ஒரு நாள் நாமிருக்க மாட்டோம்.. நாம் நட்ட மரங்கள் இருக்கும்.. நம் பேர் சொல்லிக்கொண்டு..