காதல் சுகமானது
நிழலென நானும்
நிஜமென நீயும்
போகும் பயணம்
எதுவரை போகும்
அதுவரை போதும்
என் நாளும் பொழுதும்...
உன்னில் பார்த்தேன்
என் காதலின் பிம்பம்..
உன்னால்தான்
பூத்ததடா
என்னுள் பேரின்பம்...
காணும் கண்கள்
நாணம் கொள்ள,
உன்னில் கரைந்தேன்
நானும்
மெல்ல..மெல்ல...
வீழ்த்திவிட்டாய்
அன்பால் என்னை
விழுந்துவிட்டேன்
காதலில்
கண்கள் கண்டதும் உன்னை..
இதழ் திறந்தே
உரைத்திட வந்தேன்
என் காதல் தனை...
இமை அசைவில் உணர்த்திவிட்டாய்
நீ உன்
காதல் தனை..
விரும்பி வந்தேன்
விரும்பியே நீ
விலகி நடக்க
வார்த்தை இருந்தும்
மௌனம் ஆனதடா
என் காதல்...
உன்னை பார்த்திடாது
நான் இருந்திருந்தால்
காதலின் சுகம்
தெரிந்திராது
போயிருப்பேன்...
உன்னை பிரிந்திடாதே
நான் இருந்திருந்தால்
காதலின் சுமையும்
அறிந்திடாது
புதைந்திருப்பேன்...
கலங்கிய கண்களை
ஒற்றி செல்லும்
உன் சுவாசக்
காற்று போதுமே
என் ஆயுள் நான் வாழ...
காதல் எதுவானாலும்
காதலில்
என்ன ஆனாலும்
எல்லாம் சுகமே...
காதலின் வழியிலே
இதயங்கள்
விழுந்தாலும்,
காதலின் வலியால்
இதயமது
வீழ்ந்தாலும்
காதல் சுகமானது...
காதலில்தான்
சுமைகளும்
சுகம் காணுது...