பிரிவும் சுகமானது
அழகானது
உன் தன் காதல்...
ஆழமானது
அது தரும் காயங்கள்...
இதமானது
அதன் வலிகள்...
ஈரமானது
அதனால் கண்விழிகள்...
உயர்வானது
உன்மீது வைத்த அன்பு...
ஊமையானது நேசம்
நீ இல்லையென்றபோது...
எழிலானது
பழகிய பசுமையான நாட்கள்...
ஏக்கம் அதிகமானது
உன் முகம் பார்க்கையில்...
ஒவ்வொன்றும் யுகமானது
உன் பிரிவின் நொடிகள்...
ஓலைச் சுவடியானது
வரங்களாய் நீ தந்தவை...