ஜனனம்

விதையினுள் சிறைப்பட்ட
அடிமையின்
பேராட்டம்
சிறை உடைத்து
கூரிய ஆயுதம் கொண்டு
கரு சிதைத்து
உள்ளே சென்று
உரு வளர்த்து
ஐயாறு திங்கள் கண்டு
வலி கொடுத்து
வீரம் பொங்க
சுதந்திரம் கண்ட
ஒரு வீரனின்
ஆனந்த் கூச்சலில்
ஆர்பரித்தது
பிரசவ அறை

எழுதியவர் : கவியரசன் (27-Apr-16, 11:34 am)
Tanglish : jananam
பார்வை : 51

மேலே