பட்டாம்பூச்சிகள் வெள்ளை நீலம்

பட்டாம்பூச்சிகள் வெள்ளை நீலம்

நாங்கள் சுற்றித் திரியும் இந்த
தூங்கு மூஞ்சி நிலத்தில் மட்டும்
பட்டாம்பூச்சிகள் வெள்ளை நீலம்
கட்டாயம் கண்கள் அதன் பின் ஓடும்

பயணித்துச் செல்லும் பட்டாம் பூச்சியைக்
கவனி, எப்படி அது பட்டும் படாமலும்,
பூக்களின் மீது அமர்ந்து அமராமல்
நாக்கினை நீட்டித் தேனைக் குடிக்கும்

தொட்டும் தொடாமலும் தாமரை இலைத்
தண்ணீராய் இருப்பதே நன்று என்று
பட்டாம் பூச்சிகள் பாடம் அளிக்கும்
கருப்பு வெள்ளைப் படமாய் தெரியும்.

உறவுகள் வேண்டும் ஆயினும் வேண்டாம்
மறந்தும் அந்த அளவிளை மறவாதீர்.
பட்டாம் பூச்சிகள் வெள்ளை நீலம்
பட்டுப் போனால் எழுவது ஓலம்..

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (27-Apr-16, 10:48 am)
பார்வை : 98

மேலே