கணவனதிகாரம்
அவனின்
அத்தனை பழிப்புகளையும்
தாங்கிக் கொண்டு
எச்சில்களை
பொறுக்கும் பிச்சைக்காரியென
காறி உமிழ்ந்த பின்னும்
கொள்கைகளில் பிடித்தம் வளர்க்கும் பழங்கால மனுஷியைப் போல்
முன்னுக்குப் பின்
முரணாய் ஓடும்
நிஜங்களோடு
நடாத்தப்படும்
போராட்டங்களில்
எல்லாமே
தோல்விகள் எனின்
ஞாபக மண்குதிரைகளோ
மரக்கால் பொம்மைகளோ
இனியும் வேண்டாம்
எனைத் தாண்டி நகரும்
சந்ததிகளுக்கு
இனியும்
தேவதைக் கதைகள்
பகிர வேண்டாம்
சக மனித தர்மத்தினை
இனியாகிலும்
கற்றுக் கொடுக்கலாம்
புனைதலுக்கும் நிகழ்தலுக்கும்
இன்னும் நிறையவே
வித்தியாசம் இருக்கிறபடியால்....