உழவு
பகை பகலவன் வருவதறிந்து அழுதுறைத்து
முறையிட வெள்ளி சென்றிடுமுன் துயில்
கிள்ளியெடுத்து நடைகண்ட விரிமார் உழவன்
கால் நடையோசையில் விடிவதுரைத்து - ஆயக்கடவுள்
மூலை தொட்டுதொழுது பூட்டிய கலப்பையில்
தொடர்ந்தான் விடிவெள்ளியை விரட்டியபடி
சனி மூடு பனியாகினும் அனலூட்டிய பாண்டத்தின்
தாகம் கல்திரல்தோல் விரிமார் ஊழவனுக்கு
சளிப்பில்லா நடைகண்ட உழவன் நிலையெல்லாம்
என் கொடுத்து கொடுத்தோனாகினும் வலிமை
இழந்து தூர்கட்டிய பயிர் வீதிவாய் வர
மேற்கண்ட உலகம் துயா் கொண்டுதான் போயுள்ளது
புல்களையும் ஆயுதம் கொண்டேந்தி விழிமையம்
புதுஅஞ்சனம் தீட்டி சூருடைகாணகம் கண்டால்
புள்ளறு ஊழவனும் புது ஆழியேறிச் சாகும்
நிலை இப்பழியெடு படரா கலியுகத்தில்
அவனில் !
மல்லல் முல்லைகுறிஞ்சி மரூவு கொண்டு
மருத சந்தம் கொண்டது பருவம் மழை
ஆறறரிந்து , பாய்ந்த புனலில் பகுத்து
ஏருழுது , நெற்குருத்தும் ஈடர்படா - வேளாண்மை
கண்ட வையம் இஃது ;
இன்றோ !
பொற்குருத்தும் நெலிந்துருகி நடவையில் இடர்
விதைத்து அடியேற்றிய நிலம் துடிதுடிக்க
அங்கவீனள் ஆகிவிட்டது அச்சுதமில்லா நஞ்சு
கொடுத்தும் ,அகடியம் இளைத்தும் - தலைக்
கொய்யாக் காணப்பினமானது இந்நிலங்கள் ;
வறைமுறையில்லா வளர்ச்சித் திட்டமென வசைசொல்
பொழியும் கோ வேந்தன் தூக்கி
ஈசைமொழி பிழிந்து பல்சுவை நீர்கலந்து
பவணிவர ஆவணம் செய்திடல் வேண்டும்
பூட்டிய கலப்பையில் மாட்டிய மண்ணுன்னாப்பையும்
ஏட்டிலும் புதுபாட்டிலும் அடங்கிய நஞ்சுக்கள்
மிரண்டோடிட வேளாண்மை கண்டிட
சங்கதமிழ் பாட்டுடை விவசாயம் யாகிடக்கூடும்