என்னிற மயிலிறகு

அது
மினுங்கிடும் மயிலிறகு
போன்றது...
திராட்சைகளின் திரட்சி
ஒல்லியாய் சுருண்ட
கற்பனையைத் தந்தது...
காற்றுக்குத் தகுந்தாற்
போல புசு புசுவென
கனவுகளை மேய விட்டது...
வேண்டுமென்றே பார்க்க
விட்டாள் என்றுதான்
நம்புகிறேன்....
என் கண்கள் இன்னும்
கூரானது...
கைக்கும் ஆடைக்குமான
இடைவெளியை
அதிகப்படுத்தி சரிந்திருந்தாள்...
பயணம் முடிந்து திரும்புகையில்
காதருகே வந்து
'யாருக்கும் சொல்லாதே,
வளர்ப்பது பிடிக்கும்'
என்றாள்....
வீடு வரை திறந்தேயிருந்த
அவளின் அக்குள்
பிரதேசத்திலிருந்து எட்டிக்
குதித்துக் கொண்டேயிருந்தேன்
என்னிற மயிலிறகாய்...

கவிஜி

எழுதியவர் : கவிஜி (29-Apr-16, 5:29 pm)
பார்வை : 97

மேலே