என் அன்புத்தோழி
வையத்தில் உள்ள வஞ்சகர்க்கிடையே
என் நெஞ்சை கவிச்சிலையாய்
வடித்திட்ட பாசப் பதி
நீயே தோழி!
------------------------------------------------------------------
உனக்கோர் இன்னலென்றால் தாய்சேய்
உறவாக உன்தம்பியாக உயிர்
தோழனாய் தோல் கொடுப்பேனடி,
துன்பம் எனதாகுமடி!
-----------------------------------------------------------------
உனக்கோர் காதலனாக, அவன்சொல்
கேட்டு கண்டும்காணாது எனை வெறுத்தாலும்
உயிரில் உரைந்த அன்பு
என்றும் பொய்யாகாதடி தோழி !!!
----------------------------------------------------------------
என்பிறந்த நாளன்று உன்வாழ்த்தை
முதல் வார்த்தையாக கேட்க
காத்துக் கிடக்கின்றேனடி தோழி....