எதை

வங்கி இருப்பு
குறையவில்லை!
செல்வ செழிப்பில்
சோடையில்லை!
ஆருயிர் மனையாள்
அணைத்து கொஞ்ச...
அழகு மழலை
எதற்கோ கெஞ்ச...
ரசிக்க நேரமன்றி
எதற்கும் பஞ்சமில்லை!!
அழகு மகளிர்
வாசற் தெளிக்கும்
வளையோசை
கேட்க வழியில்லை!
பால்காரன் யார்?
பெரியப்பா யார்?
மழலை அறியவும்
வழியில்லை!
ஒன்பது மணியடித்தால்
கணவன் ஒருபுறம்!
மனைவி ஒருபுறம்...!
உறவாகிடுது
பொம்மையுடன்
குழந்தை!
வேண்டுவன தாண்டி
குவித்துவிட்டு...
பொன் பொருள்
சலிக்குமளவு
திரட்டிவிட்டு...
விரல்விட்ட
கிளைவிட்ட
உறவின் முறையை
நகமென எளிதாய்
நறுக்கிட்டு
இழந்ததிலுமன்றி
சேர்த்ததிலுமன்றி
கொடுக்கும்
பணமெறிந்து
பொம்மைக்காயழும்
மழலையாய்...
ஏகாந்த போகந்தனில்
எங்கெங்கோ தேடி
அலைகிறானே
எந்திர மனிதன்?!
எதை???!
***********************