புதியதோர் உலகம் செய்வோம்

கைகள் நன்றாய் சேர்த்து
மரங்கள் நன்றாய் நட்டு
மண்ணின் வளத்தை பெருக்கி
பசுமை உலகைப் படைத்திட
புதியதோர் உலகம் செய்வோம்

நன்றாய் மண்ணில் பிறந்தோம்
அழகாய் தினமும் படித்தோம்
வேலை வேலை வேலையென
வெளிநாட்டிற்கு வேகமாய் பறந்தோம்
உலகில் இந்தியா உயர்த்திட
நம் நாட்டில் உழைத்திடு திறம்பட
புதுவிதமான முயற்சியோடு
புதியதோர் உலகம் செய்வோம்

புகையை மறந்து
புன்னகை செய்திட
புகையை புதைத்து
புதுமையோடு வாழ்ந்திட
புதியதோர் உலகம் செய்வோம்

மனிதா
மதுவை மறந்து
மகிழ்வோடு வாழ்ந்து
மதிப்போடும்
மரியாதையோடும் வாழ
புதியதோர் உலகம் செய்வோம்

கலாம் கண்ட
கனவுகளை
கரைபடியாமலும்
காலத்தால்
கரைந்து போகாமலும் அவர்
கனவை நனவாக்க
கனவுகளோடு
புதியதோர் உலகம் செய்வோம்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (1-May-16, 12:11 pm)
பார்வை : 169

மேலே