படம் பார்த்து எழுதிய கவிதை கவிஞர் இரா இரவி நன்றி பாக்யா வார இதழ்
படம் பார்த்து எழுதிய கவிதை ! கவிஞர் இரா .இரவி !
நன்றி பாக்யா வார இதழ் !
குழந்தைகளுக்கு உள்ள உயிர்நேயம்
இருப்பதில்லை
பெரியவர்களுக்கு !
பசியால் அழும் குழந்தைக்கு
உணவூட்டும் உணர்வுக்கு
தலைவணக்கம் !
நிசமென்று நினைத்து
நிழலுக்குச் சோறுட்டும்
குழந்தையே வாழ்க !
தொலைக்காட்சியை
உண்மையைக் காட்சியை நம்பியது
கள்ளம் கபமற்ற குழந்தை !
ஈவு இரக்கம் நேயம்
எல்லாம் உண்டு குழந்தைக்கு
பெரியோர்களுக்கு ?
எல்லோரும் குழந்தையாகவே
இருந்துவிட்டால்
இருக்காது சண்டை !
ஏற்றத் தாழ்வு நீக்கி
சமதர்ம சமத்துவம் நிலவினால்
ஒளியும் வெறுமை !
பணக்கார வீட்டு குழந்தைக்கு
உள்ள மனிதநேயம்
இருப்பதில்லை பணக்காரர்களுக்கு !
பசியால் துடிக்கும் குழந்தைக்கு
பசிபோக்கத் துடிக்கும் குழந்தை
வள்ளலாரின் மறுவடிவம் !
அறியாத வயதிலும்
அறிந்துள்ளது
மனிதநேயம் !