பாக்யா அட்டைப்படத்திற்கு கவிஞர் இரா இரவி
பாக்யா அட்டைப்படத்திற்கு ! கவிஞர் இரா .இரவி!
என்ன பார்வை ஓரப்பார்வை
பறவைகள் பரவசம்
பாவையோ பழரசம் !
கோடை வெயில்
தாக்கத்திருக்க
குடையாய் தொப்பி !
இலவசம்தானே
செலவு இல்லையே
புன்னகை புரிந்தாலென்ன ?
தங்க நகையை விட
பாசி நகையே
நங்கைக்கு அழகு !
பாவையே என்ன சொன்னாய்
பறவைகளிடம்
களி நடனம் புரிகின்றன !
வன தேவதையே
சைவமாக மாறுங்கள் என்று
வேண்டுகோள் வைக்கின்றாயோ ?
உண்மையே
ஆள் பாதி ஆடை பாதி
அழகாக்கியது ஆடை !
வளையல் அணிந்துள்ள வஞ்சியே
வனப்பில் விஞ்சினாய்
ரதியை !
காடு அதை நாடு
விலங்குகளை வதைக்காமல் நாடு
பிறக்கும் மகிழ்ச்சி !
.
காதலன் வருகைக்காய்
காத்திருக்கும் பெண்ணே
வருவான் கண்களை மூடு !