மவிமுக நிறுவனத் தலைவரின் வேண்டுகோள்

மது விரும்பிகள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவரும் முதல் அமைச்சர் வேட்பாளருமான மொடாக்குடி மாடசாமியின் வேண்டுகோள்:::

அனபிற்குரிய மவிமுக-வின் வெற்றிமுக வேட்பாளர்களே. வெயிலின் கொடுமை கடுமையாகி வெப்ப அலை வீசுவதால் பகல் நேரங்களில் வாக்குச் சேகரிக்கச் சென்று பொது மக்களைத் துன்புறுத்துவதையும் உங்கள் உடல் நலனைக் கெடுத்துக் கொள்வதையும் தவிர்க்கவும்.

சில தினங்களுக்கு முன் சந்நியாசி ஒருவரின் தரிசனம் எனக்குக் கிடைத்தது. தேர்தலில் நம்மை எதிர்த்து நிற்பவர்களைப் படுதோல்வி அடையச் செய்ய சத்ரு சம்ஹார யாகம் செய்யவேண்டும் என்று சொன்னார். எனவே வெயில் நேரத்தில் வாக்குச் சேகரிக்கச் செல்வதைத் தவிர்த்து தோட்டம் உள்ளவர்கள் அவரவர் தோட்டத்திலும் தோட்டம் இல்லாதவர்கள் வீட்டுத் தோட்டங்களிலும் நிழலில் அமர்ந்து சத்ரு சம்ஹார யாகம் செய்யும்படி வேண்டிக்கொள்கிறேன் நமது கொள்கை: அளவோடு குடித்து வளமோடு வாழ்வோம் என்பதை மறந்துவிடாதீர்கள்

எழுதியவர் : மலர் (1-May-16, 11:22 pm)
பார்வை : 131

மேலே