மொட்டை அடித்து, அலகு குத்தி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்

அன்புள்ள வாக்காளப் பெருமக்களே, நமது அனைத்திந்திய அல்வா கழகத்தின் ஏமாற்றகிரி வேட்பாளர் அருணகிரி அவர்கள் எங்கள் கட்சியின்

தலைமைக் கழகக் கட்டளைப்படி மொட்டை அடித்து அலகு குத்தி என்னருகில் இருகரம் கூப்பி வாக்குக் கேட்டு ஜீப்பில் நிற்கிறார். அவர் அலகு குத்தி

இருப்பதால் அவரால் பேச இயலாது என்பதைத் தாங்கள் அறிவீர்கள். அவரது உடன்பிறந்த சகோதரனான நான் ரத்னகிரி அவர் சார்பாக வாக்குக்

கேட்கிறேன். எங்கள் கட்சியின் சின்னம் இரட்டை வாழைப் பழம், இரட்டை வாழைப் பழம் என்பதை மறவாதீர்கள். இரட்டை வாழைப் பழச்

சின்னத்திற்கு உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து அண்ணன் அவர்களைப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்.

எங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் ஒரு கிலோ இலவச அல்வா வழங்கும் திட்டத்தை சத்தியமாக

நிறைவேற்றுவோம் என்று உறுதியளிக்கிறோம். எங்கள் சின்னம் இரட்டை வாழைப் பழம், இரட்டை வாழைப் பழம். மறவாதீர்.

எழுதியவர் : மலர் (1-May-16, 8:03 pm)
பார்வை : 170

மேலே