மௌன நடை

பொங்கும் கடலும்
பொழியும் நிலவும்
உங்கள் கதை சொல்ல


கானக்குயிலும்
கார்காலத் தென்றலும்
உங்கள் நினைவூட்ட


மென்மழைச் சாரலும்
மெல்லிய தூறலும்
கூடவே இசை மீட்க


இயற்கையும் இணைந்து
வந்து மெல் இசையோடு
நினைவூட்ட


நீர் துயிலும் இடம் கடந்து
மெல்ல நான் செல்கையிலே
வழிகின்ற கண்ணீரை
பொழிகின்ற மழை மறைக்கும்

எழுதியவர் : சர்மிலா (2-May-16, 4:09 pm)
Tanglish : mouna nadai
பார்வை : 214

மேலே