10 செகண்ட் கதைகள் - மூன்று குரங்குகள்

சென்ற சுதந்திர தினத்தன்று, காந்திஜி, தான் இந்தியாவில் விட்டு வந்த மூன்று குரங்குகளின் தற்போதைய நிலை பற்றி அறிய ஆவல் கொண்டு கடவுளைக் கேட்டாராம்.

கடவுளும் "ஓ! அவைகளுக்கென்ன, மிக நலமாக உள்ளன..கண்களை மூடியபடி இருக்கும் குரங்கே இப்பொழுது இந்தியாவின் நீதித்துறை..காதை பொத்திய வண்ணம் இருக்கும் குரங்கு இந்தியாவின் அரசாங்கம்!"
என்றாராம்.

"அப்போ வாயை மூடிய வண்ணம் உள்ள மூன்றாவது?" என்று காந்திஅடிகள் வினவ,கடவுள் சொன்னாராம்..

"அதுதான் உன் நாட்டு தற்போதையை பிரஜைகள்!"
================================================

எழுதியவர் : செல்வமணி (2-May-16, 7:45 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 155

மேலே