ஏர் கழப்பை
அன்றிரவு என்ன நடந்தது என்றே தெரியவில்லை எல்லாம் மாயாஜாலம் போல் இருந்தது,,
உலகிலுள்ள அனைத்து ஏழை,நடுத்தர மக்களின் ஒவ்வொரு வீட்டின் முன்பும் ஒரு,ஒரு கோடி ரூபாய் கிடந்தது
இது நிச்சயம் கடவுளின் அதிசயமே
உலகிலுள்ள அனைத்து ஏழைகள் நடுத்தர மக்களும் ஒரே நாளில் செல்வந்தர்கள் ஆகிவிட்டனர்,,
அனைவரும் செல்வந்தர்களாகி விட்டதால் யாரும் எந்த வேலைக்கும் செல்வதில்லை,,
அனறிலிருந்து அனைத்து வேலைகளும் அப்படியே நின்று விட்டது ,, இடப்பற்றாக்குறை பெரும் அளவில் ஏற்பட்டது செல்வந்தர்கள்,மக்கள் அனைவரும் தங்களது மலத்தையும்,தங்கள் வீட்டு சாக்கடைகளையும் தாங்களே சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்க்கு தள்ளப் பட்டனர்,,
இது ஒரு பக்கம் இருக்க
உணவின் தேவை அதிகரித்தது ,உணவு பற்றாக்குறை பெரும் அளவில் ஏற்ப்பட்டது ,ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவுக்கே திண்டாடும் நிலை ஏற்பட்டது ,,
எங்கு உலகிலுள்ள விவசாயிகள் அனைவரும் அவர்கள் வீட்டின் முன்பு கிடந்த பணத்ணை எடுத்துக் கொண்டு விவசாயத்தையே விட்டு விடுவார்களோ என்ற அச்சம் நாடு முழுவதும் பரவியது,,
அப்போது இந்திய விவசாயிகள் அனைவரும் தங்கள் வீட்டின் முன்பு கிடந்த பணத்தை எடுத்து குப்பை தொட்டியில் போட்டு விட்டு
அன்றாடம் போல் அன்று அதி காலையும் அனைவரும் ஏரை தோழில் சுமந்து கொண்டு தங்களது வயலை நோக்கி புறப்பட்டனர் உழுதிட
-விக்னேஷ்