அடி என்னவளே
பார்த்தும் பாராமல் போறவளே கள்ளி
காயம்பட்ட இதயம் கத்துது புள்ள
திசைகள் இருந்தும்
போக வழி தெரியவில்லை
காட்டாறும் நானில்லை
நீளமிள்ளா பார்வை நித்தமும் விளங்கவில்லை
அர்த்தம்...
புரிந்து புரியாமலும்
பாவையை...
அறிந்து அறியாமலும்
மயக்கம்...
தெளிந்து தெளியாமலும்
கானலில் வலை விரித்த மீனவனாய்
வீடு செல்கின்றேன்
விழி மேல் விழி வைத்து காத்திருப்பேன்
நீ வரும் நாட்களுக்காக வாசலிலே
கண்கள் பூத்து கலங்கிய நாட்கள் கழியுமோ-இல்லை
யுகங்கள் நூறு போகுமோ கனவுகளாய்
வா பெண்ணே நீ வந்தால்
என்னுலகம் உனக்காக படைத்து
ஜென்மங்கள் ஏழு உடன் இருப்பேன்
அடி சிந்தையிலே நினைவுகள் விதைத்து
வஞ்சனை செய்தவளே
வாகை சூட வழியுண்டோ-இல்லை
நினைவுகளால் என்னை கொல்வாயோ
தனிமையில் இரவுகள் போக
என் நிழல் கூட சிரிக்குதடி-ஆதலால்
மஞ்சத்தில் ஊடல் கொள்ள
கள்ளி நீயும் சம்மதம் தருவாயோ-இல்லை
இச்சைகள் தீராமல் இரவுகளும் நீளுமோ
அடி பெண்ணே...செல்ல கள்ளியே…
கர்வங்கள் தீராமல் மண்ணில் நானும் மடிவேனோ
-அ.பெரியண்ணன்