என் விழிகளில் ஈரம் காயவில்லை 555
என்னவளே...
நீ உன் முகமெங்கும்
புன்னகையோடு...
என்னை எப்படி அழைக்கிறாய்
உன் திருமணதிற்கு...
நீ கொடுக்கும் முதல் அழைபிதழ்
எனக்குதான் என்கிறாயடி...
உன்னை நான் மறப்பது
ரொம்ப கடினமடி...
மறையாத உன் நினைவுகளோடு
நானும் வருகிறேனடி...
உன் மணநாள் சந்தோசத்தில்
நானும் பங்கேற்க...
அதோ அந்தகடற்கரையில் உன் மடிமீது
நான் தலைசாய்த்தபோது...
முடிகோதிய உன்
பூ விரல்கள்...
வேறொரு விரலை கோர்த்து
நடப்பதை காணவருகிறேனடி நான்...
உன் நினைவுகள் என்னில்
மறையவுமில்லை...
என் விழிகளில்
காதல் ஈரம் காயவுமில்லை.....