என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் - 16

இன்றேனும் என்னை
காவிக்கண்டு கற்பனையாய் (சாக்லேட் பேண்டசி )
லாவிக்கொ(ல்)ள்வாயா ??

இன்றேனும் என்னை
கருப்புக்காடென (பிளேக் பாரஸ்ட் )
விருப்பமாய் விழுங்கிடுவாயா ??

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
மொழிகளுக்குள் மகாயுத்தம்
உன் சுவாச பாசைக்கு
ஓசையாவது யாரென ..

மொழிகளுக்குள் மகாயுத்தம்
உன் சுவாசத்திற்கு
எழுத்துவடிவமாவது யாரென ..

மௌனம் கூட மொழி ஆகுகையில்
உன் சுவாசம் ஏன்
என் தேசியகீதம் ஆகக்கூடாது ??

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

எழுதியவர் : ஆசை அஜீத் (4-May-16, 10:50 am)
பார்வை : 381

மேலே