சிந்துப்பாடல் --- காவடிச்சிந்து-- 6
மாணவர்கள் நெஞ்சமதில் நிற்கும் -- கல்வி
மாந்துகிற பாங்கினிலும் கற்கும் -- நிறை
மண்ணுலகில் செல்வமது தண்ணொளியாய் நின்றிடவும்
மண்டு -- புகழ்
கண்டு .
வானவர்கள் போற்றிடுவர் என்றும் -- நல்
வாசமுடை கல்வியது வென்றும் -- அந்த
வண்டமிழின் உன்னுசுவை பண்ணிசையாய்த் தங்கிடவும்
வாரீர் -- சுவை
தாரீர் .