நான் மரம் பேசுகின்றேன்

வயலோரம் வளர்ந்தேன்
நாட்கள் உருண்டோட
வயல்கள் சாலைகளாக
சாலையோரம் ஒதுங்கினேன் ...

எனக்கு தெரிந்து
நான் விதைக்கப்பட்டு
மண்ணை முட்டிக்கிளித்து
தலைதூக்கி வருடம்
ஐநூறு கழிந்திருக்கும்...!!
என்னில் கூடுகட்டி
முட்டை இட்டு
குஞ்சு பொறித்து
பறந்து சென்ற பறவைகள்
பல நூறு இருக்கும்...!!!

அரசன் முதல்
ஆண்டி வரை
மந்திரி முதல்
மக்கள் வரை
என் நிழளில்
நான் கண்டதுண்டு...

குதிரையை கட்டியதும்.
மேயும் ஆடு மாடுகளை
ஒதுக்கியதும்...
குழந்தைகள் என்னைச் சுற்றி
விளையாடியதும்...
இளம் காதலர்கள் என்னுடன்
உறவாடியதும்...
மனம் தாளாமல் சிலர்
என் கிளையில் தூக்கிலிட்டு
தொங்கியதும்...
காற்றோடு நான் அசையும்
போதெல்லாம்
என் உணர்வோடு என்றும்
தொட்டுச்செல்பவை...

பயன்கள் பல நான்
கொடுத்ததும்
பாவம் மனிதர்களுக்கு
என்னை பிடிக்கவில்லையா??-அல்லது
என்னை புரியவில்லையா ??
சாலைகளை அகலப்படுத்த
என்னை அறுத்துவிட்டார்கள்..
மலை போல் குவிந்து
கிடக்கின்றேன்
வெப்பம் தாளாமல் மக்கள்
மழை தேடி அலைகின்றனர்

நிஜம் புரியாமல்
நீங்கள் செய்யும்
காரியத்தால்
நீங்கள் துடிப்பதைக்கண்டு
தீயில் எறிகின்றேன்
விறகாய்.....!!!
என்றும்....என்றென்றும்

எழுதியவர் : jeevan (5-May-16, 11:46 pm)
பார்வை : 125

மேலே