வலியோடு வெற்றி

வலிகளுக்கான அர்த்தங்கள் தான் எத்தனை??
பிறப்பின் ஆதி முதல்
இறப்பின் அந்தம் வரைக்கும்
வலிகளுக்கான அர்த்தங்கள்தான்
எத்தனை??
வலிகளின் வழியில் பயணித்தே
வாழ்வில்,
முதுமை என்னும் முத்தைப்
பெறுகின்றோம்.
வலிகளுக்கான அர்த்தங்கள்தான்
எத்தனை??
துன்பத்தின் தொடக்கத்திலும்
இன்பத்தின் இறுதியிலும்
வலிகளுக்கான அர்த்தங்கள்
உணர்த்தப்படுகிறது ..
உணரப்படுகிறது.
ஓர் உயிரின் ஜனனத்திற்கும்
ஓர் உயிரின் அஸ்தமிப்பிற்கும்
நடுவே,
வலியின் உணர்வுகள் உணரப்படுகிறது.
ஆம்... வலிகளுக்கான அர்த்தங்கள் தான் எத்தனை??
வலியின் ஆழத்தை
வருடியே...
வெற்றியும் தோல்வியும்
நிர்ணயிக்கப்படுகிறது .
வாழ்வில் வலியோடு
போராடு. ..
வலியைத் தழுவிக் கிடைக்கும்
வெற்றிக்கே வலிமை அதிகம்.
மனமே...
வலியோடு போராடு.
வெற்றி நமதே! !

எழுதியவர் : மு.முருகேஸ் (5-May-16, 9:30 pm)
Tanglish : valiyodu vettri
பார்வை : 73

மேலே