மேசை விசிறிகள்

மக்கள் நலனில் அக்கறை கொண்ட
வாக்காளன் ஒருவன் கத்திரி வெயிலின்
நோக்காடு தாங்காமல் சாக்காடு புகுந்து
சுவனபதி ஏகினான் சுவர்க்கம் வியந்தான்

வைரக் கந்தரம் வழியெலாம் சுவராக
விண் மீன் ஓட்டம் கண்ணிலே காட்டும்
வான் வீட்டில் நுழைந்தான் ஆங்கே
சுவரெங்கும் கடிகாரம் தொங்கிடக் கண்டான்.

எதற்கு இத்தனை இங்கே உள்ளன
பதறிய பாமரன் கேட்ட கேள்விக்கு
அதராய் அவனை அளந்து கொண்டே
பனிச் சிறகுகள் போர்த்த தூதுவன்
அனித்தியம் ஆனவன்அவனிடம்சொன்னான்
சூதகன் பெயரைத் தாங்கும் இவை அவர்
பாதகப் பொய்யைச் சொல்லிடும் போதில்
காதையைச் சொல்லி கனிந்து ஓடிடும்
தாமிர முட்கள் தானாய் சுற்றும்.

ஓடாமல் ஒரு மூலை தன்னில் தொங்கிய
ஒன்றினைக் காட்டி அது யாருடையது
என்றவன் கேட்க விவேகா நந்தரின்
குன்றாப் புகழைக் காட்டிடும் கடிகை.

அப்படி ஆயின் தமிழக முதல்வர்
பதவியில் இருந்த இருக்கும் இருவரின்
பதவிசான கடிகாரங்கள் எங்கே?

கடிகாரம் அல்ல அவற்றை வைத்திட
முடியாத வெயிலில் மேசை விசிறியாய்
அலுவலக அறையில் அமைத்து இருக்கிறோம்
நயனே பயனேயென நிலை நாட்டிட..

எழுதியவர் : தா. ஜோ ஜூலியஸ் (6-May-16, 2:11 pm)
பார்வை : 78

மேலே