மெல்லூஞ்சல் ஆட்டம்
மகரந்த தேன் உண்டு,
மதிமயங்கிய இளம் வண்டு,
இளைப்பார ஓரிடம் கண்டு,
மெல்லூஞ்சலில் இதமாய் ஆடியது!
அமிலம் ஊற்றிய இரும்பாக
கால நேரம் கரைய,
சீனியில் சிக்கிய எறும்பாக
பணிகள் பனிப்போல் உறைய,
சொர்க்கம் இதுவென பாடியது!
கழிந்த காலங்களோடு கடைசியில்
தானும் ஒழிந்த சேதி யறிந்து,
அது ஆடியது ஊஞ்சல் அல்ல
சிலந்தியின் வலையென வாடியது!