கனவு

ஏறாத மலையேறி ,
எட்டாத உயரத்தை
எட்டி நாம் பிடித்தாலும்,
அங்கோர் எறும்பு கூட்டம்
அதன் உணவை எடுத்து செல்லும்,
நம் கனவையும் கெடுத்து செல்லும்,
என்னை மிஞ்ச முடியாதென்று
ஏளனமாய் சொல்லி செல்லும் !!

உணவின் தேடலும்,
கனவின் தேடலும் ஒன்றல்ல,
அவமானத்தால் நம் தலை
குனிவதும் நன்றல்ல!
உணவின் தேடலெல்லாம்,
கையிலிருந்து வயிர் வரை ,
கனவின் தேடலெல்லாம்,
காலத்திற்கும் உயிர் வரை!

உணவின் சுவையை நாவறியும்,
கனவின் சுவயை யாரறிவார்?
முயற்சி செய்பவர் மட்டும் அறிவார்,
முழுமதி போல் உணர்வார்,
விழுதலும் ,அழுதலும்
எழுதலுக்கே என்பார்!

காசிற்காக ஒடும் ஒட்டமெல்லாம்,
மேககூட்டம் போலாகும்,
நிலையாக ஓரிடத்தில் நில்லாது
மழையாக மண்ணில் விழும்!
கனவிற்காக ஒடும் ஓட்டமெல்லாம்,
காற்றோட்டம் போலாகும்,
கதவடைத்து போனாலும் ,
சாவித்துவார இடைவெளியில்,
சளைக்காமல் மீண்டு எழும்!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 11:31 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
Tanglish : kanavu
பார்வை : 46

மேலே