கூடிநின்ற வேளை

வீடு மன்றம் சிறக்க, வளர,
பசுமை நிற வலிமை உரைக்க,
பூர்வ புண்ணியம் செழிக்க
புதன் சுடர் விட்ட பொழுது.

மனை பூக்க மணவாளன் கைபிடிக்க
வளர்ந்து சிவப்படைந்த செவ்வாய்,
செம்பவழ வளை கொண்டு வலைந்து
வல்லமை காட்டிய நிற்க.

லாபத்தைஎல்லாம் எடுத்துரைக்கும்,
விருப்பக் காதலை அறிந்து அளிக்கும்
தங்கமஞ்சள் வண்ணம் குழைத்து
வெண்சாமரம் குடைகொண்ட
தங்கமகன் குருவாம் தழுவிய நிமிடம்.

தனக்கு அதிபதியாம் தன முகம்
உரைப்பவனாம் கரைத்துவிட்ட வெள்ளி
நிறைத்தவனாம் நன்மைகளையே
நினைப்பவனாம் சுக்கிலம் ஊற்றடிப்பவனாம் சுக்கிரன் ஒளிர்ந்த நிலையில்,

அனைத்தும் கூடிவந்த வேளையில்
அவஸ்த்தைகளை மட்டுமே அனுபவித்தேன்
என்கிறாயே உன்னிலை, எந்நிலை என்பது, கொள்வது.

இன்றை காணாமல் நாளையை எண்ணி
என்ன பயன். கட்டப்பட்ட கரங்களை மனம்கொண்டு மரத்தினில் முட்டுவதையே செய்து முடித்திருக்கிறேன்.

இது உன்னை வதைக்கவோ சிதைக்கவோ அல்ல, உண்மைநிலையை உரைக்க.




எழுதியவர் : jujuma (20-Jun-11, 6:54 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 294

மேலே