உழவு

உழவுக்கதிகாரமியற்றி
உழவைத்துதித்தவனே.......
எங்கேயிருக்கிறாய் நீ.....?
என் ஈனஸ்வரம் உன் காதில் கேட்கிறதா........?!?!?
உன்னை வளர்த்தெடுக்க
எத்தனைமுறை நானென்
கருப்பை பிளிந்திருப்பேன்
உன் வயிற்றையொருமுறை வாஞ்சையுடன்
தொட்டுப்பார்......

பாட்டனும் முப்பாட்டனும்
பாடிவைத்த பாடல் கேட்கும்
ஆம்
உன் வயிற்றைத் தொட்டுப்பார்
அஃதென் வரலாறு சொல்லும்........


ஏப்பமிட்டுக்கொண்டும் வயிற்றுத்தசை விழியைமறைக்குமளவுள்ள
உனக்கெப்படித்தெரியும்
மன்னின் மகத்துவம்.......?


காடுகளழித்து என் கால்களை உடைத்தாய்
மலைகளையொழித்து- என்
அதரங்கள் கரைக்கின்றாய்....!!!


குறைப்பிறசவம் பெறவைத்து
குறைப்பிறசவம் பெற்றுவிட்டாய்.....!!!

காசுக்காக
கலப்பையுடைக்கின்றாய்...
கால்நூற்றாண்டுக்கான
கஞ்சியை நீ ஒருவனே குடிக்கின்றாய்...!!!

என்சானுடம்பில்
ஒருசான் வயிற்றை என்சானாய் மாற்றத்தான் இத்தனை முயற்சியேன்....?

ஆறடி நிலம்தான்
அரசனுக்கும் தேவையென நாட்டையிழந்த அரிச்சந்தரனுக்கும் தெரியுமப்பா......
உன் ஆறடித்தவைக்கேன் அறுபது வீட்டுமனை......?

மன்னுக்கும் உயிருண்டு
மன்னை மலடாக்கினாயே
உன் மகனென்ன
மன் தின்பானோ......?

உன் காதுகளைத் தீட்டிக்கொள்
கவனமாய்க் கேட்டுக்கொள்..

பார்த்தபக்கம் விதைத்தான்
உன் முப்பாட்டன்,
பாத்தியிட்டு விதைத்தான் உன் பாட்டன்
மாடியில் விதைக்கிறாய் நீ
உன் பேரனென்ன
சோத்துச்சட்டியில் விதைப்பாபானோ.........?

நிலத்தையும் ஏரையும்
நீர்த்துப்போகச் செய்துவிட்டால்
வயிற்றில் விதைக்க முடியாதப்பா....

கடைசியாய்க் கேட்கின்றேன்
விவசாயம் வாழவிடு-இன்றேல்
இனம்தின்று வீழ்வாய் நீ.....

உழவுக்கதிகாரமியற்றி
உழவைத்துதித்தவனே.......
எங்கேயிருக்கிறாய் நீ.....?
என் ஈனஸ்வரம் உன் காதில் கேட்கிறதா........?!?!?

எழுதியவர் : அரி.கார்த்திக் (8-May-16, 2:32 pm)
பார்வை : 75

மேலே