அன்புடன் அன்னையர்க்கு
அன்புடன் அன்னையர்க்கு
அம்மா என்று அன்புடன் அழைக்க
அனைத்து உயிருக்கும் ஆதாரமாய்
அவனியெங்கும் அறியப்படும் அரும் பொக்கிஷம்
உதிரத்தை பாலாக்கி உயிருக்கு உணவளித்து
ஊமையாக உணர்வுகளை தான் உள்ளடக்கி
தன் வாழ்வை தன் மகவுக்கு எனக்கொண்டு
அன்பும் அரவணைப்பும் கலந்த உரிமையில்
அமைதியுடன் செயல்படும் அருமையான அற்புதம்
தாயினம் அனைத்தையும் இத்தினம் போற்றி கொண்டாடிடுவோம்

