அம்மா

கண்ணன் ஒரு கைக்குழந்தை மெட்டு
அன்பு மிகும் அன்னை உன்னை ஆவலுடன் பாடவந்தேன்
செந்தமிழ் தேன் சொல் எடுத்து அன்புடனே போற்றி நின்றேன்
அனுதினம் உன் அருளை பெற்றிடவே வாழ்த்தி நின்றேன்
அன்னை நீயே வந்தருள் வாய் அன்புடனே காத்தருள் வாய்
உந்தன் புகழ் பாடிடவே எந்தன் மனம் நாடுதம்மா
உயர் நலன்கள் பல தந்த அன்பு தெய்வம் நீயம்மா
ஏழிசை ஸ்வரம் எடுத்து ஏந்திழையே உன்னைப் பணிவேன்
ஏற்றம் மிகு வாழ்வதனைப் பெற்றுயர்ந்து புகழ் பெறுவேன் (அன்பு)
பைந்தமிழ் சரமெடுத்து பாமாலை சூட்டிடுவேன்
பைங்கொடியே உன்புகழைப் பணிவுடனே இசைத்திடுவேன்
பாங்குடன் கேட்டு தினம் பரிவுடனே காத்திடுவாய்
பாசம் மிகும் எந்தன் தாயே நேசமுடன் எமைக் காப்பாய் (அன்புமிகும்)