தாயே உனக்காக
உயிர் தந்தாய்
உயர்வைத் தந்தாய்
உணவு தந்தாய்
உணர்வைத் தந்தாய்
உறவு தந்தாய்
உன்னதம் தந்தாய்
பசிக்கு விருந்தாய்
நோய்க்கு மருந்தாய்
நீதான் இருந்தாய்
உன் கருவறையில் இடம் தந்து - எனக்குப்
பெருமை சேர்த்த பெருந்தாய்
ஆகாயம் போல் இருந்து எனைக்காக்க
ஆண்டவன் கொடுத்த அருந்தாய்
நேற்றல்ல, இன்றல்ல, நாளையல்ல
ஏழேழு ஜென்மத்திற்கும்
நீதான் என் தாய்
நான்தான் உன் சேய்.