அம்மாடி கலை அருந்ததி

அம்மாடி கலை அருந்ததி; நீ
ஆசையின் விருந்தடி.
எம்மாடி உன் அழகு
ஏழு உலகத்திலும் இல்லையடி..!
கண் ஜோடி வியக்கின்ற
கட்டழகு மெனியடி... நீ
விண்ணோடிச் செல்லுகின்ற
வெண் நிலவின் பிள்ளையடி...!
கிள்ளாத தென்றலின்
கீத வடிவமடி,
அள்ளாத மோகங்கள்
அசைந்திடு சிரமமடி & நீ
மெல்லாத பூவின்
மெல்லிய இதழ்களடி...!
உன் அழகின் விருந்தில்
உலகமே அடக்கமடி
உன் அன்பின் மயக்கத்தில்
உறங்குவதே கவிதையடி...!
எந்நாளும் உனை நினைப்பதே
என் கடமையடி.
எப்பொழுதும் உன்னில் உறவாடுவதே
எனக்கு இன்பமடி...!
நாஞ்சில் இன்பா