ஓயாத உன் நினைவலைகள் 555

என்னவளே...

நீ என்னை நேசித்தது
எல்லோருக்கும் தெரியும்...

நீ என்னைவிட்டு சென்றது
யாருக்கும் தெரியாதடி...

சோகத்தை பகிர்ந்து கொண்டால்
குறையும் என்றார்கள்...

உன் நினைவின் சோகம்
எனக்குள் குறையகூடதடி...

அதனால்தான் யாரிடமும்
சொல்லாமலே எனக்குள்ளே...

நீதான் என்னைவிட்டு
சென்றுவிட்டாய் தடுக்கமுடியவில்லை...

உன் நினைவுகளை
தடுக்க முடியுமடி என்னால்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (9-May-16, 8:43 pm)
பார்வை : 509

மேலே