காதல் போதையில்

என்னருகில் அவள் இருந்தாள்
நெகிழியும் கண்ணாடியாய் ஒளிர்ந்தது...
எனைப் பிரிந்து சென்றாள்
கண்ணாடி மதுக் கோப்பையானது......


மதுக் குடுவைத் தீர்ந்ததும்
கண் மறுக் கோப்பைத் தேடுது.....


மாதுவின் மோகத்தில் மதுவின் மயக்கத்தில்
இதயம் தள்ளாடி
காதல் போதையில் விழுந்தது......


துணி சோப்பை போல அவள்
கண்ணுல என்னைக் கரைத்தாள்...
நுனி நாக்கில் விசத்தை வைத்து
வார்த்தையை அள்ளித் தெளித்தாள்.....


மயில் போல அவளை
மனதின் கதவினில் மரகதமாய் செதுக்கினேன்...
சிறகு முளைத்தப் பருந்தாய்
என் மனதைக் கிழித்துப் பறந்தாள்......


அந்த வேதனைத் தீயில் வேகுவதால்
பழரசத்தின் சாறாய் தேகம் ஆகிறேன்......


மஞ்சரளி விதையை பொடியாய் அரைத்து
என் மனதில் மெல்ல விதைத்தாள்...
மார்கழி மாதக் குளிரிலும் எனை
சித்திரை வெயிலாய் வாட்டி வதைத்தாள்......


தரையில் மிதந்த நளினம் பார்த்து
செந்தாமரை என்றவளை நினைத்தேன்...
சேற்றில் நனைந்ததுப் போல
எனைக் கழுவிச் சென்றாள்......

அந்தத் துன்பக் கடலில் விழுந்ததால்
உப்புக் கற்களாய் உள்ளம் ஆகிறேன்......

எழுதியவர் : இதயம் விஜய் (9-May-16, 8:20 pm)
Tanglish : kaadhal pOthaiyil
பார்வை : 422

மேலே