உழவு

உழவு ...!
********

வெற்றுடம்பில் வேதனையும்
வேதனையில் சாதனையுமாய்
வெயிலில் வெந்து
வேர்வையில் குளித்து
வீடு வரும் நெல்மணியில்
வெற்றியின் பெருமிதம் கண்டு

மகிழ்ந்த காலம் ...
மனதினில் கதைப் பேச ..
மகனோடு பட்டணம் வந்து
மாடிவீட்டு தனியறையும்
மாடத்து பால்கனியும்
மட்டுமே துணையாகிய நேரம். .

மாமரத்து நிழலில்
கயிற்றுக் கட்டிலிட்டு. .
வரப்பு வெட்டிய களைப்பு தீர
வாகாக படுத்துறங்கிய வேளையில
அயிர மீனு கொழம்பு வச்சு
நாட்டுக் கோழி வறுத்தெடுத்து
அயித்தமக மீனாட்சி. ..

ஆசையா கொண்டு வந்து ஊட்டிவிட அந்த சந்தோஷம் மாறாம
அவளப் பார்த்து சிரிச்சுக்கிட்டே ...
வரப்பெல்லாம் வெட்டி ...
வயக்காடு வனப்பினிலே
மனதைப் பறிகொடுத்து. ..

தைமாத அறுவடையில்
தாலி செஞ்சு நா போட்டு
தாங்காத சந்தோஷத்தில்
மூனுபோகமும் முத்தா விளைய. .
முழுகாம போன மனைவி
முப்பத்து மாசத்திலே

மூனுபுள்ள பெத்துப் போட ...
நான் கொண்ட கஷ்டம்
என் பிள்ளைங்க படக் கூடாது னு
ஏரோப்ளேன் ஏத்தி
எம்புள்ளைங்கள படிக்க வச்சு
எந்தக் கஷ்டமில்லாம நான் வாழ ...!

ஏத்திவிட்ட ஏணியாய் -இன்று
என் வயல் ஆகிடுச்சு அநாதையாய்..
எட்டிப் பார்க்க யாருமில்ல
ஏன்னு கேட்க நாதியில்ல
மாமரத்து கிளிங்க மட்டும்
துணையாக போச்சு என் வயலுக்கு .

மனசுக்குள்ள நொந்த நான்
மீண்டும் ஆரம்பிப்போமா
உழவு எனக் கேட்க
உனக்கு வேறு வேலை இல்லையா
போட்டதை தின்றுவிட்டு கிட- அந்த வயலுக்கு போட்டாச்சு திட்டம் பல

எனச்சொல்லி. ..
எழுதி விட்டார்கள் பத்திரத்தை
தொழிர்சாலையொன்றை
தொன்மையாய் கட்ட
துனையாயிருந்த மாமரத்தை வெட்டி...!

#உயர்த்திவிட்ட #உழவை யும்
உயிர்காக்கும் உணவின் பெருமையும் மறந்து
பணம் ஒன்றே குறிக்கோளாய் ...!
பாழாய் போன நான்
பார்த்துக் கொண்டு மட்டுமிருக்கிறேன் ....
-#மன்னைஜீவி

எழுதியவர் : ஜீவிதா அரசி (10-May-16, 2:25 pm)
Tanglish : uzhavu
பார்வை : 69

மேலே