புதியதோர் உலகம் செய்வோம்

புதியதோர் உலகம் செய்வோம்
**********************************************

அன்பு என்ற 'கல்'கொண்டு
அகிலம் என்ற கட்டிடம் அமைய
அடுக்கி வைப்போம்..
ஆசை முத்தங்களை ...

முத்துச் சிரிப்பினை
முன்வாசல் வைத்து. .
கொல்லும் கோபம் தனை
பின்வாசல் வைத்து. ..

காற்று வர ஜன்னலை
கருணையால் கட்டி வைத்து. .
வீசுகின்ற தென்றலில்
வீண் கோபம் சிதறடித்து

நுண் அறிவின் துணைக் கொண்டு
நுழைவாயில் தானமைத்து ..
பாலின் தூய்மையாய்
மனதின் நிறமாற்றி .....

புதியதோர் உலகு செய்வோம்
புன்னகையால் புதுமை படைப்போம்
கனவுகள் மெய்த்திட
கனவுலகைப் படைப்போம். .

சரித்திரம் மாற்றிட
சந்ததி சிறந்திட
கவித்துவமாய் காதல் செய்வோம்
கண்நோக்கிய அன்பினாலே ....

-#மன்னைஜீவி

எழுதியவர் : ஜீவிதா அரசி (10-May-16, 2:30 pm)
பார்வை : 2303

மேலே