ஈழ அகதித் தமிழன்

சொந்த தேசத்தில்
நாம் அகதிகள்...!
அந்த தேசத்தில்
நாம் விறகுத் துண்டுகள்...!
அகதி முகாம்தான்
எம் முகவரி,
மறவாமல் மடல் வரையுங்கள்,
நாம் வேறொன்றும்
உங்களிடம் கேட்க மாட்டோம்...!
ஒருவேளை கஞ்சியும்
படுத்துறங்க
ஒரு ஓலைப் பாயும்,
தந்தால் மட்டும் போதும்,
என்று யார் சொன்னது...?
நாம் கந்தையானாலும்
கசக்கிக் கட்டும்
பரம்பரையின் பங்காளிகள்
உங்களின் அனுதாப
அலைகள் வேண்டாம் எமக்கு...!
ஒரு குடிசை கட்ட
நிலம் கொங்கள்,
அங்கே ஆகாய விமானத்தை
இறக்கிக் காட்டுகிறோம்...!
எமது பாட்டன்
கப்பலோட்டியத் தமிழன்,
இன்று சிறிய தோணி கூட
ஒட்ட எமக்கு உரிமையில்லை...!
மறக்காமல் எமக்கு
மடல் வரையுங்கள்,
முகவரி;
நாடற்ற
தமிழன், அகதிமுகாம்.
சுயநல வாதிகளே;
மறக்காமல் மடல்
வரையுங்கள்...!
நாஞ்சில் இன்பா
9566274503-91