மொளன யுத்தங்கள்

மொளன யுத்தங்கள்

சிரிப்பவன் சிரிக்கிறான்
முறைப்பவன் முறைக்கிறான்
அழுபவன் அழுகிறான்

நினைப்பவன் நடத்துகிறான்
நடிப்பவன் நடிக்கிறான்
துடிப்பவன் துடிக்கிறான்

மறைப்பவன் மறைக்கிறான்
மறுப்பவன் மறுக்கிறான்
கொடுப்பவன் கொடுக்கிறான்

வளர்பவன் வளர்கிறான்
வலிப்பவன் துடிக்கிறான்
வஞ்சிப்பவன் வஞ்சிக்கிறான்

பசிப்பவன் புசிக்கிறான்
புசிப்பவன் உழைக்கிறான்
உழைப்பவன் உழைக்கிறான்

தொடங்குபவன் தொடங்குகிறான்
முடிப்பவன் முடிக்கிறான்
வாழ்பவன் வாழ்கிறான்

இவை செயல்கள்
ஆனால் வருடல்கள்
இவை உணர்ச்சிகள்
ஆனால் அதிர்ச்சிகள்

மனதில் தோன்றும் அனைத்தும்
கண்களில் தெரிய மறுக்கும்
கண்களில் தெரியும் அனைத்தும்
மனதில் ஏற மறுக்கும்

மனதின் கூடையில் கண்கள்
பூக்கள் தூவ
கண்களின் கூடையில் மனங்கள் இலைகள் வீச

இயற்கையின் நடுவில் ஏற்றத் தாழ்வு இல்லை
இமைகளின் அடியில் ஏன் இந்த ஏற்றத் தாழ்வு

-மனக்கவிஞன்

(தலைப்பு எழுத்துத் தோழமை வழங்கினார்)

எழுதியவர் : மனக்கவிஞன் (10-May-16, 9:42 pm)
பார்வை : 108

மேலே