புத்தகம் பேசுகிறது

நான்!
உங்கள் அறிவை
வளர்க்க கூடியவன்!
உங்களுக்கு
மன அழுத்ததை
தரக் கூடியவன் அல்ல!
என்னை
மனப்பாடம் செய்யாமல்
உங்கள் அறிவை
வளர்த்துக் கொள்ள
முயலுங்கள்!
உங்கள் நோக்கத்தினை
வெல்லுங்கள்!
என்னை நண்பனாய்
நோக்குங்கள்!
என்னை சத்ருவாய்
நோக்காதீர்கள்!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (10-May-16, 9:59 pm)
பார்வை : 497

மேலே