காவடிச் சிந்து

தாய்மையினைப் போற்றிடுவோம் வாரும் - நல்ல
தன்மைகளை நம்மிடத்துச் சேரும் - அந்தத்
தாயவளைக் காத்ததினால் நேயமுடை
நன்மைகளும்
தாரும் - எனைப்
பாரும்


வேய்ங்குழலின் நாதமது இன்பம் - உயர்
வேதங்களும் போக்கிவிடும் துன்பம் - நான்
வேண்டியதைத் தந்திடவும் பான்மையுடன்
வாழ்ந்திடவும்
வேண்டும்- இங்கு
யாண்டும்

எழுதியவர் : மஞ்சுளாரமேஷ் (10-May-16, 10:01 pm)
பார்வை : 146

மேலே