அம்மா ஒரு சொல் முதல் கவிதை

அம்மா
ஒரு சொல் முதல் கவிதை
சீர் குலையா தளை தட்டா
செந்தமிழ்க் கவிதை !

மா என்ற போது சிரித்தாள்
ம்மா என்ற போது மகிழ்ந்தாள்
அம்மா என்ற போது ஆனந்தத்தில் திளைத்தாள் !

அள்ளி அணைத்த அன்னையும் அவளே
ஆரம்பக் கவிதையை சொல்லித் தந்த ஆசிரியையும் அவளே !

அம்மா எனும் கவிதை கற்ற மாணவன் நான்
அம்மா எனும் காவியம் எழுதப் போகும் கவிஞனும் நானே !

----கவி ஓவியன் கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (11-May-16, 9:34 am)
பார்வை : 179

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே