விழிகளின் ஈரம்
உன் விழிகளில் வழியும்
ஈரக் கண்ணீர்
எனக்காக மட்டுமே
என நினைக்கும் போது
என் உதிரம் உறைந்து
நொடிபொழுதே
உடம்பின் உயிர்
உள்ளத்தைக்
கரைத்து கல்லாக
மாறினேன் தாயே
உன் அன்பின் அளவை
அளக்க முடியா
அகாலப் பிறவியாய்!!!!!!!!!!!!!!!!!!
ஈடு இணையற்ற அன்பினை
ஏன் உன்னிடம் மட்டுமே
இறைவன் கொடுத்தான் !!!!!!!!!!!!!!!!!!!!!!
இமை பொழுது தடுமாறிய
என்னைக் கண்டு
இதயம் துடித்து
என்னைத் தாங்கினாய்
நீ சோறுண்ட பருக்கை
சிதறியது எண்ணாமல் !!!!!!!!!!!!!!!!!!!!
என் தோல்விகளை
உன் தோல்விகளாக எண்ணி
துவண்டு துணிந்து
ஆறுதலானாய் நீயே !!!!!!!!!!!!!!!
நான் செய்யும் தவறுகள்
அனைவருக்கும் தவறே !!!-ஆனால்
உனக்கு மட்டும் அது
சரிதான் -ஏனெனில்
அதை நான் செய்ததால்
தானே அம்மா !!!!!!!!!!!!!!!!!!!!!
நீ செல்லும் ஒவ்வொரு
திருமண
விழாவிலும்
உன் மன ஓட்டத்தில்
நான் மட்டுமே மணப்பெண்!!!!!
நீ பார்க்கும் ஒவ்வொரு
ஆடைகளும் எனக்காக
நெய்யப்பட்டது போல்
உன் மனத்தால் என்னை
அலங்கரிப்பாய்
உன் மன மேடையில் !!!!!!!!!!!!!!!!
நீ விழுந்த வலி
மறந்து என்னைக்
கண்டு பூரிப்பாய்
என்னை ஒரு மருந்தாக
எண்ணி !!!!!!!!!!!!!!!!!!!!!!!
நீ எனக்காக மாடாய்
உழைத்து ஓடாய்த்
தேய்வாய்- அது
உனக்கு பெரிதல்ல !!!
நான் உனக்கு ஒரு நாள்
உழைத்தால் ஓராயிரம்
முறை அதை நினைத்து
பெருமைபேசி
அகமகிழ்வாய் !!!!!!!!!!!!!
மருமகள் வைத்த
சூப்பர்க் குழம்பும்
உன் பார்வையில் சுமாரே!!!!!!!!!!!
உன் மகள் நான் வைத்த
சுமார்க் குழம்பும்
சூப்பர் என மீண்டும்
மீண்டும் உண்பாய் !!!!!!!!!!!!!!!
அனைத்திலும் அருமையானவள்
என்னால் ஏனோ சுயநலம்
கொள்கிறாய் !!!!!!!!!!!!!
எத்தனை கோபுரங்களை
நீ பார்த்திருந்தும் நான்
கட்டின கூரை வீடு
மட்டுமே உன் ரசிப்புக்கு
ஏற்றதாகிறது !!!!!!!!!!!!
என் கை விரல்கள்
பிடித்து நடந்த -உன்
கைகளில் நான் பார்த்த
சுருக்கங்கள் என்
இதயத்தை கலக்கியது
உன் வயதை காட்டி !!!!!!!!!!!!!
எத்தனை உறவுகள்
உன்னுடன் இருக்க
உன் விழிகள் தேடுவதோ
என் வருகையை
மட்டுமே !!!!!!!!!!
இதை நான் நினைக்கும் போது
என் விழிகளின் ஈரத்தை
உன் அன்பின் கரம்
துடைக்காதோ என
ஏங்கி காத்திருக்கும் -உன்
இதயத் துடிப்பு !!!!!!!!!!!!!!